இஸ்லாம் ஒரு முழு அறிமுகம்
இவ்வலைப் பதிவில் யாஹ குழுமங்களிலும், திண்ணையிலும் இஸ்லாம் பற்றி நான் எழுதியவைகளை உள்ளிடுகிறேன். இஸ்லாம் பற்றி ருமி எழுதிய 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்' புத்தகத்தின் அறிமுக மடலை அதன் நூலாசிரியர் நாகூர் ருமி மரத்தடியில் உள்ளிட்டதைத் தொடர்ந்து இவ்விவாதம் தொடங்கிற்று. இந்த வலைப்பதிவை கூடிய விரைவில் ப்ளாக்ஸ்பாட்டுக்கு குடிபெயர்த்து, இதை கூட்டுப் பதிவாக மாற்றவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.
இவ்விவாதம் நம்மை உண்மையை நோக்கி இட்டுச் செல்லட்டும்.
எல்லாம் வல்ல இறைவனுக்கு வணக்கம்!
- நேச குமார் -
nesa_kumar2003[@]yahoo[.]com
[ ] - நீக்கிவிட்டு மெயில்க.
|
|
|
 |
|
Tuesday, October 05, 2004
From: "Munavar Sultan" Date: Sun Sep 12, 2004 12:19 pm Subject: RE: [Maraththadi] Re: Reply to Badri on Islam - Mail 3
நேசகுமார்,
ஒரு வலைத்தளத்தில் உள்ள சில வி"யங்களை படித்துவிட்டு ஒட்டு மொத்த இSலாம் உலகத்தையே குற்றம் சாட்டுகிறீர்கள். நிறைய படிக்கிறீர்கள், ஆனால் மணதில் எற்கனவே ஒரு முடிவை வைத்துக் கொண்டு படித்ததை மாற்றி அர்த்தம் செய்து கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்.
======================== ஏன் சகோதரரே, கல்லையும், மரத்தையும்,காடனையும், மாடனையும், நதியையும், இயற்கையையும் வணங்கும் நாங்கள் எல்லோரும் என்ன degrading and perverse action ஐ தயக்கமே இல்லாமல் செய்யக் கூடியவர்களா? எங்களுடைய சமூகம் அசுத்தமானதா? இந்தச் சமூகம் ஓடிவந்த பார்...¢க்களுக்கும், யூதர்களுக்கும் அடைக்கலம் தந்து இSலாமிய 'உரிமைகள்' போலில்லாது முழு சுதந்திரம் தந்ததே, அதற்குப் பெயர் தான் degrading and perverse action without hesitation ஆ? ======================== இத்தனை படித்து விட்டு எப்படி மேலே உள்ள கேள்வியை கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை. இSலாமின் அடிப்படையே, "படைப்புக்களை வணங்காதே, படைப்பாளியை வணங்கு" என்பதே. நீங்கள் கல்லையும், மரத்தையும்,காடனையும், மாடனையும், நதியையும், இயற்கையையும், இன்னும் பலவற்றையும் வணங்காதீர்கள் என்று இSலாம் கூறுகிறது.
திருகுர்ஆனை பல மொழிகளில் மொழிபெயர்த்தபோது இப்படி தப்பர்த்தம் செய்து கொள்வார்களோ என அஞ்சினாலும், நிறைய பேரின் நண்மையைக் கருதி விதிவிலக்குகளை ஒதுக்கிவிடலாம் என் எண்ணினார்கள். திருகுர்ஆனை படித்து அதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கு, அதனைப் படிக்கும் முறை, மற்ற வசனங்களோடு தொடர்பு படுத்தித் தெளிதல், அந்த வசனங்கள் இறங்கிய காலம் மற்றும் சூழ்நிலை என்று பல வி"யங்கள் உண்டு. வலைத்தளங்களில் இப்படிப்பட்ட வசனங்களைப் படிப்பதை விட தமிழில், சென்னை IFT வெளியிட்ட விளக்கக் குறிப்புகளோடு உள்ள குர்ஆனை படித்துப் பாருங்கள்.
ஒரு வலைத்தளத்தில், ஒருவரின் கருத்தை எடுத்துக் கொண்டு இதுதான் இSலாமா? எனக் கேட்பது சரி எனப்படவில்லை. இது நீ அனுப்பிய சுட்டி தானே எனச் சொல்ல வேண்டாம். இதில் குர்ஆனின் வசனங்களையும், தற்கால கண்டுபிடிப்புகளையும் தொடர்பு படுத்தி நிறைய வி"யங்கள் உள்ளன. இது உதவலாம் என எண்ணி அனுப்பினேன். வலைத்தளம் முழுவதும் படிக்க நேரம் கிடைக்கும் பச்சத்தில் உங்கள் கருத்துக்களுக்கு பதில் எழுதியிருப்பேன்.
=============== முனவர், உங்களை முSலீமாக இல்லாமல், என் நிலையில் வைத்துப் பாருங்கள் அப்போது இக்கருத்துக்கள் எவ்வளவு தவறானது என்று தெரியும். மதச்சார்பின்மை தவறு என்று கூறும் ?ருன்யா<யா, அதை முSலீம் அல்லாத நாடுகள் பின்பற்றி, அவரவர்களும் தங்கள் மதம் தான் உயர்ந்தது, மற்ற மதக்கோட்பாடுகள் தவறு, அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதினால் , இந்த உலகில் அமைதி நிலவுமா? ================ முSலிம் அல்லதோரை அழியுங்கள் என்று திருகுர்ஆன் சொல்லவில்லை, திருகுர்ஆனின் வசனங்களை எடுத்துக் கொண்டு உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.
அன்புடன், முனவர்.
Posted at 01:24 am by NesaKumar
Permalink
Thanks to Maraththadi Group
From: "nesa_kumar2003" Date: Sat Sep 11, 2004 4:42 pm Subject: Discussion on Islam - some clarifications
அன்பர்களே,
எனக்கு வரும் பல தனி மடல்களுக்கு என்னால் உடனடியாக பதிலளிக்க முடிவதில்லை. எனக்கு அலுவலக அலுவல்கள், தனிப்பட்ட அலுவல்கள் மத்தியில் இங்கு பொதுவில் எழுதுவதே சிரமமாயிருக்கின்றது. இருந்தாலும், வி வாதம் அனைவருக்குமே நல்லது, ஆரம்பித்ததை முடித்துவிடுவோம் (இன்னும் பத்ரியிடம் சில சான்றுகள் தரவேண்டியுள்ளது ) என்றுதான் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
ஆனால், எனக்கு வரும் மடல்கள் அனைத்தையும் படிக்கிறேன். ஆதலால், நான் தனிப்பட்ட முறையில் பதிலளிக்கவி ல்லை என்றால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொதுவில் இட்ட மடல்களுக்குக் கூட சிலவற்றிற்கு பதிலளி க்கவில்லை ( எ.கா: லதாங்கி ). அக்கேள்விகளுக்கு மற்ற மடல்களில் கூறப்பட்டிருந்த விஷயங்களே பதில் என்பதால் தான் பதிலளிக்கவில்லை.
ஏற்கெனவே முதல் மடலில் நான் சான்றுகள் அளிப்பதாக கூறியிருந்தவனவற்றையெல்லாம் சுருக்கி ஒரே மடலில் பத்ரிக்கும் , மற்றவர்களுக்கும் இட்டு முடிக்கலாம் என்றிருக்கிறேன்.
மரத்தடியில், இந்த அளவுக்கு விவாதம் நடக்க அனுமதித்தையே பெரிய விஷயமாக கருதுகிறேன். வேறெந்த தமி ழ்க் குழுவிலும் இதை அனுமதித்திருப்பார்களா, அனுமதித்திருந்தாலும் இவ்வளவு நாகரீகமான முறையில் பரி மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்று சந்தேகமாய்த்தானிருக்கிறது.
மட்டுறுத்துனர்களுக்கும் மற்றனைவர்களுக்கும், என்னை தனிப்பட்ட முறையில் தாக்காமல் கேள்விகளை கேட்ட அன்பர்கள் பலருக்கும் எனது நன்றிகள்.
ஆகவே, இன்னும் ஒரு மடல் மட்டும் ( Reply to Badri on Islam - Mail 5) நாளையிட்டு முடித்துக் கொள்கிறேன்.மற்றபடி, குறிப்பாக கேள்விகள் கேட்டு வரும் மடல்களுக்கு மட்டும் எனது கருத்துக்களை முன் வைக்கலாம் என்றிருக்கிறேன்.
- நேசகுமார் -
Posted at 01:21 am by NesaKumar
Permalink
harunyahya.com - islamic hate site against non-muslims
முனவர்,
தாங்கள் சில வலைத்தளங்களை சுட்டியிட்டு, இவை தான் உண்மையான இஸ்லாத்தை எடுத்தியம்புகின்றன என்று கூறி யிருந்தீர்கள். எதுதான் உண்மையான இஸ்லாம் என்று இந்த வலைத்தளங்கள் குறிப்பிடுகின்றன என்று அறிந்து கொள்வதற்காக, அவற்றுள் ஒன்றான ஹருன்யாஹ்யா.காம் (harunyahya.com) என்ற வலைத்தளத்தை சென்று பார்த்தேன்.
அந்த வலைத்தளம், உலகு தழுவிய இஸ்லாமிய அரசு ஏற்படவேண்டும் என்று கூறுகிறது. இன்று இருக்கும் தனித்தனி நாடுகள் தவறு என்று திருக்குரானை மேற்கோள் காட்டி கூறுகிறது:
"Today, it is still possible to set up an authority to act as a guide to all Muslims. In the Qur'an, Allah orders all Muslims to obey "those in command among them." (Qur'an, 4: 59). Now, the methods used to select "those in command" can be altered according to the requirements of the age (such asappointment or popular vote). Thus is possible to establish an Islamic Union and a central Islamic authority, based on democratic principles and the supremacy of law...."
http://harunyahya.com/50islamic_union.php
இந்த ஒன்று பட்ட முஸ்லீம் நாடு காஷ்மீர் பிரச்சினையை 'தீர்த்து' வைக்கும் என்று குறிப்பிடுகிறது அந்த வலைத்தளம். மேலும், 'கிறிஸ்துவர்களுக்கும் யூதர்களுக்கும்' அந்த ஒன்று பட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு 'உரி மைகளை' கொடுக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இஸ்லாம் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் அளி க்கும் 'உரிமைகள்' பற்றிய எனது விமரிசனம் ஒரு புறம் இருக்கட்டும், அந்த ஒன்று பட்ட இஸ்லாமிய பேரரசி ல் இந்துக்களாகிய எங்களின் கதி என்ன?
ஏன் அந்த வலைத்தளம் அது பற்றி மெளனம் சாதிக்கிறது?
எதோ தெரியாமல் இந்துக்களைப் பற்றி விட்டு விட்டது போல் தெரியவில்லை. ஏனெனில் பல இடங்களில் காஷ் மீர் பிரச்சினை (அதை பாலஸ்தீனப் பிரச்சினையோடு equate செய்திருக்கிறது இந்த வலைத்தளம்) பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடும் இந்த வலைத்தளம், அந்த ஒன்றுபட்ட இஸ்லாமிய அரசில் இந்துக்களின் நிலைமை என்ன என்பதை வேண்டுமென்றே சொல்லாமல் விட்டு விட்டது போல் தான் தெரிகிறது.
காரணம் ஒரு கட்டுரையில் அவர் சிலை வழிபாடு செய்பவர்கள் அசுத்தமானவர்கள் (தி.கு ஐ மேற்கோள் காட்டி) என்றும், நாங்களெல்லாம் செய்யும் பிரார்த்தனை போன்றவை இறைவனை அடையாது என்றும், நாங்கள் எல்லாம் அல்லாஹ்வால் அழிக்கப் பட்டு விடுவோம் என்றும் ஹருன்யாஹ்யா கூறுகிறார்:
http://harunyahya.com/50idolatry_wis06.php
இன்னொரு இடத்திலோ, தெளிவாக கிறிஸ்துவர்கள், யூதர்கள் மட்டுமே சகித்துக் கொள்ளப் படுவார்கள், சிலை வழிபாடு செய்யும் (என்னைப் போன்றவர்கள்) நேர்மையே இல்லாதவர்கள், எந்தவிதமான அக்கிரமத்தையும் செய்யக் கூடியவர்கள் என்று திருக்குரானை மேற்கோள் காட்டி வெறுப்பை உமிழ்கிறார் ("have no moral precepts and who are capable of committing every kind of degrading and perverse action without hesitation.") :
http://harunyahya.com/32terrorism_people_soc09.php
ஏன் சகோதரரே, கல்லையும், மரத்தையும்,காடனையும், மாடனையும், நதியையும், இயற்கையையும் வணங்கும் நாங்கள் எல்லோரும் என்ன degrading and perverse action ஐ தயக்கமே இல்லாமல் செய்யக் கூடியவர்களா? எங்களுடைய சமூகம் அசுத்தமானதா? இந்தச் சமூகம் ஓடிவந்த பார்ஸிக்களுக்கும், யூதர்களுக்கும் அடைக்கலம் தந்து இஸ்லாமிய 'உரிமைகள்' போலில்லாது முழு சுதந்திரம் தந்ததே, அதற்குப் பெயர் தான் degrading and perverse action without hesitation ஆ?
எப்போதோ எதோ ஒரு சூழலில் எழுதி வைத்துவிட்டுப் போனவைகளை மேற்கோள் காட்டி, மனித குலத்தை இப்படி துண்டாடும் , வன்முறையைத் தூண்டும் ' அறிஞர்கள் ' தாம் இஸ்லாத்தை உண்மையாக ரெப்ரசன்ட் செய்பவர்களா?
மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையில் secular humanism இறைவனுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார். மதச்சார்பின்மையும், மனித நேயமும் தவறு, கடவுளுக்கு எதிரானது என்று சொல்பவர்கள் மனிதர்களா? இவர்கள் தாம் நீங்களு குறிப்பிட்டுள்ள உண்மையான இஸ்லாத்தை வலைத்தளங்கள் மூலம் பரப்புவர்களா?
இதே கட்டுரையின் கடைசியில், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், யூதர்கள் எல்லோரும் சேர்ந்து உண்மையான எதிரி களான பாகன்களை அழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பின்பற்றினால், உலகம் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், யூதர்கள் என்று ஒருபுறமும் , இந்துக்கள், புத்தமதத்தினர், சீக்கியர்கள் , அனிமிஸ்ட்டுகள் போன்றவர்கள் மறுபுறமும் என்று பிரிந்து இரத்த ஆறு ஓட வழி வகுக்காதா?
யூதர்களுக்கும் ஒன்றுபட்ட இஸ்லாமிய அரசில் பாதுகாப்பு வழங்கப் படும் என்று அவர் சொல்வது அப்பட்ட பொய் என்பது இன்னொரு கட்டுரையில் விளங்குகிறது. அதில், இஸ்ரேல் தான் மத்திய ஆசியாவின் தற்போதைய போர்களுக்கு, வன்முறைகளுக்கு காரணம் என்று யூதர்கள் மீது குற்றம் சாட்டுகிறார். எல்லா பிரச்சினைகளுக்கும் யூதர்கள் உலகை ஆள விரும்புவது தான் காரணம் என்று வெறுப்பை உமிழ்கிறார்:
http://www.mediamonitors.net/harunyahya8.html
மேலும் அந்த வலைத்தளத்தை நடத்தி வரும் ஹருன்யாஹ்யா ( சரியாக எனக்குத் தெரியவில்லை, அவர் பேரில் தளம் இருப்பதாலும், அவர் அதில் கட்டுரைகள் எழுதியிருப்பதாலும் அவர்தான் உரிமைதாரர் என நினைக்கி றேன். அவரது பெயர் adnan oktar என்றும் துருக்கியைச் சேர்ந்தவர் என்றும் இணையத்தில் படித்தேன்) எழுதி யுள்ள புத்தகங்களில் Humanism என்ற கொள்கையே தவறு , அது மதத்திற்கு எதிரானது என்று எழுதியுள்ளார் போல் தெரிகிறது. இந்த சுட்டியைப் பாருங்கள்:
http://www.mediamonitors.net/harunyahya47.html
மேலே கண்ட சுட்டியில் இன்னொரு புத்தகம் எழுதியிருக்கிறார், அதில் புத்தமதம் கடவுளின் கருத்துக்களை திரி த்த, சிலை வழிபாடு செய்யும் , மூட நம்பிக்கை கொண்ட மதம் என்று கூறியிருக்கிறார் ( http://harunyahya.com/buddhism01.php ). ஆகவே, அவர் கிறிஸ்துவர்களுக்கும், யூதர்களுக்கும் மட்டும் இஸ்லாமிய நாட்டில் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று கூறிவிட்டு புத்தமதத்தினர், இந்துக்கள் போன்றோர்களை அந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டது எதோ accidental coincidence என்று கருத முடியவில்லை.
முனவர், உங்களை முஸ்லீமாக இல்லாமல், என் நிலையில் வைத்துப் பாருங்கள் அப்போது இக்கருத்துக்கள் எவ்வளவு தவறானது என்று தெரியும். மதச்சார்பின்மை தவறு என்று கூறும் ஹருன்யாஹ்யா, அதை முஸ்லீம் அல்லாத நாடுகள் பின்பற்றி, அவரவர்களும் தங்கள் மதம் தான் உயர்ந்தது, மற்ற மதக்கோட்பாடுகள் தவறு, அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதினால் , இந்த உலகில் அமைதி நிலவுமா?
இந்த வலைத்தளத்தை சரியாகப் பார்க்காமல், அது இஸ்லாத்தை உண்மையாக பிரதிபலிக்கிறது என்று நீங்கள் கூறிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
- நேசகுமார் -
Posted at 01:20 am by NesaKumar
Permalink
From: "Munavar Sultan" Date: Sat Sep 11, 2004 2:33 pm Subject: RE: [Maraththadi] Reply to Badri on Islam - Mail 3
Friends,
Following are some of the genuine Islamic web sites:
harunyahya.com islamicfinder.org hajirahfoundation.com
Anbudan, Munavar.
From: "nesa_kumar2003" Date: Sat Sep 11, 2004 2:53 pm Subject: Re: Reply to Badri on Islam - Mail 3
Munavar,
I have not quoted from any of the above mentioned sites. Most of the verses from Holy Quran have been taken from this website:
http://www.tamililquran.com
I think that this is a genuine Islamic website. If not, do let me know.
- nEsakumAr -
Posted at 01:17 am by NesaKumar
Permalink
நேசகுமார், எல்லாரும் இந்த இழையில் ஏதோ பேசுகிறார்களே, அப்படி என்ன இருக்கிறது என்று நேற்றுதான் உங்கள் மடல்களைப் படித்தேன்.(பொதுவாக மதம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் இருந்ததில்லை; தற்போது கொஞ்சம் curiosity இருக்கிறது; ஆரம்ப காலம்தான் இது.)
> இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். ஹமாஸ் போரிடுவது பாலஸ்தீனம் யூதர்களால் ஆக்கிரமிக்கப் பட்டது என்பதால் அல்ல. அது, நமது consumptionனுக்கு. அல்லாஹ் அவர்களை (குரானில்) வெறுத்தி ருப்பதால்தான்* அவர்களுக்கு எதிராக அந்த முஸ்லீம் போர் தொடுக்கிறான், தன்னுடைய உயிரையும் தந்து அவர்களை அழிக்க நினைக்கிறான். >> மேற்கண்ட பகுதிதான் இந்த மடலை எழுதத் தூண்டியது.
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் 'யூத வெறுப்பு' என்று பார்ப்பது ஒற்றைப் பரி மாணப் பார்வை. அடிநாதமாக அதுவும் காரணமாக இருக்கலாம், இருக்கவே முடியாது என்று நான் சொல்ல வரவில்லை.
இது 'புனித இட'த்துக்கு சொந்தம் கொண்டாடும் போராட்டம். நூற்றாண்டு காலமாக நடப்பது. பார்க்க: http://www.npr.org/news/specials/mideast/the_west/ (Brittanica Encylopedia-விலும் மத வரலாற்று நிகழ்வுகள் பற்றிப் படித்தேன். அது இலவசம் இல்லை என்பதால் சுட்டி தர முடியவில்லை.)
சம்பந்தமில்லாமல் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது எனக்கு. அமெரிக்காவில் NBC டிவியி ல் The West Wing (http://www.nbc.com/The_West_Wing/index.html) என்று ஒரு சீரியல் வரும். நான் தொடர்ந்து பார்த்து பிறகு கைவிட்ட ஒரே சீரியல் இதுதான். வெள்ளை மாளிகையின் virtual West Wing இது. 'யாவும் கற்பனையே' என்பதையும் அறிக.
ஒரு கிறிஸ்துமஸ் வாரம். அமெரிக்க அதிபர் சோகமாக இருப்பார். Chief of Staff- இடம் பேசிக் கொண்டிருந்தது என்ன என்று புரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்துதான் பொறி தட்டியது. பெத்லஹேமில் இருக்கும் புனித இடத்தில் விளக்கு ஏற்றப்பட்டதா என்று தெரியாமல் தவி க்க, Chief of Staff, ஏற்பாடு செய்திருப்பதாகவும், செய்தி வந்தபின் தெரிவி ப்பதாகவும் சொன்னார்.
மற்றவை உங்கள் புரிதலுக்கு...
-பரி
> இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் 'யூத வெறுப்பு' என்று பார்ப்பது ஒற்றைப் பரி > மாணப் பார்வை. அடிநாதமாக அதுவும் காரணமாக இருக்கலாம், இருக்கவே முடியாது > என்று நான் சொல்ல வரவில்லை. > > இது 'புனித இட'த்துக்கு சொந்தம் கொண்டாடும் போராட்டம். நூற்றாண்டு காலமாக > நடப்பது. > பார்க்க: http://www.npr.org/news/specials/mideast/the_west/ > (Brittanica Encylopedia-விலும் மத வரலாற்று நிகழ்வுகள் பற்றிப் படித்தேன். அது > இலவசம் இல்லை என்பதால் சுட்டி தர முடியவில்லை.) >
பரிமேல்ஸ்,
இருக்கலாம். நீங்கள் சொல்வது போல யூத வெறுப்பு மட்டுமே பாலஸ்தீன பிரச்சினையின் அடிப்படை என்று கருதுவது தவறாக இருக்கலாம். இந்த 'புனித இடம்' என்று சொந்தம் கொண்டாடுவது (தற்போதைய) இஸ்லாமி ய கோட்பாடுகளின் அடிப்படையில் சரியே. நான் பல மடல்களில் கூறியுள்ளது போல இயேசுநாதரும், மோசஸ ¤ம் தமக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும் போது அவர்களுடன் சம்பந்தப் பட்ட தலங்களையும் சொந்தம் கொண்டாடுவது தவிர்க்க இயலாதது என்றுதான் நான் நினைக்கிறேன்.
சிலுவைப் போர்களே, முஸ்லீம்களிடமிருந்து கிறிஸ்துவர்களின் புனித இடங்களை மீட்பதற்காக ஏற்பட்டவைகள் தாம். இராமரையும் ஒரு இஸ்லாமிய இறைத்தூதர், ஆதலால் அவர் பிறந்த இடத்தை தூய்மைப் படுத்துவதற்காகவே அங்கு ஒரு மசூதி கட்டப் பட்டது என்று கருதும் இஸ்லாமியர்களும் உள்ளனர்.
மதத்தின் பெயரால் நடக்கும் இந்தக் கூத்துகளையெல்லாம் பார்க்கும்போது, மத நம்பிக்கையுள்ள எனக்கே சில சமயம் வெறுப்பு ஏற்படுகிறது.அதனால் தான் உஷா, ரமேஷ் போன்றவர்கள் மதமே வேண்டாம் என்று சொல்லும்போது அதுவும் சரியோ என்று கூட பல சமயங்களில் தோன்றுகிறது.
- நேசகுமார் -
Posted at 01:15 am by NesaKumar
Permalink
Friday, September 10, 2004
Discussion on Islam - Some Clarifications
From: "nesa_kumar2003" <nesa_kumar2003@y...>
Date: Sat Sep 11, 2004 3:39 am
Subject: Re: Reply to Badri on Islam
பிரசன்னா, நிறைய அலுவல்கள். சிலர் அனுப்பியிருந்த தனிமடல்களுக்கும் இன்னும் பதில் எழுதவில்லை.ஆகவே தாமதாக
உங்களுக்கு பதிலிடுகிறேன்.
>
> [1] திம்மிகள் மற்றும் புத்தகங்களுடையோர் என்பது என்ன?
>
பத்ரிக்கான நான்காவது மடலில் இது பற்றி ஓரளவிற்கு சொல்லியிருக்கிறேன். விவரமாக சொல்வதென்றால்,
எதை எழுதுவது எதை விடுவது என்றே புரியவில்லை. ஒற்றை வரியில், இது யூதர்கள், கிறிஸ்துவர்கள் ஆகி
யோரக் குறிப்பது என்று சொல்லலாம். இந்தியாவில் சில சமயம் இந்துக்களும் இவ்வகையினராக கருதப்
பட்டனர். அவுரங்கசீப்பால் கொல்லப் பட்ட அவனது அண்ணன், தாரா ஷிகோ உபநிஷத்களை இறைவனால் உலகி
ற்கு அனுப்பப் பட்ட முதல் வேதமாக முஸ்லீம்கள் கருதும் ஓர் புத்தகம் என்று எண்ணினான். உபநிஷத்களைப் பற்றி
ஒரு புத்தகமும் எழுதினான் (இதை கண்டு வெகுண்ட மதவாதிகள், அவுரங்கசீப்பை தூண்டி விட்டு தாராவைக்
கொல்ல வைத்தது ஒரு தனிக்கதை). அபுல் பசல்(அக்பர் காலம்) கூட இந்துக்களை ஒரே கடவுளை
வணங்குபவர்கள் என்றுதான் கூறுகிறார். இஸ்லாம் பிரகாரம், முஸ்லீம் அல்லாதவர்களில் திம்மிக்களை மட்டுமே சகித்துக் கொள்ளலாம். ஆகையினால்,
எண்ணிக்கை அதிகமாயிருந்த இந்துக்களை வேறு வழியில்லாமல் இந்தப் பட்டியலில் சேர்த்து மதவாதிகளிடம்
இஸ்லாத்துக்கு புறம்பாக தாம் நடக்கவில்லை என்று காட்டிக்கொண்டனர் சில இஸ்லாமிய அரசர்கள் என்ற
கருத்தும் உள்ளது. எப்படியோ, இன்றைய உலகில் மனித நேயக் கருத்துக்களும், ஆன்மீகம் போதும் மத என்ற நிறுவனமயமாக்கல்
வேண்டாம் என்பன போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தமாதிரி பிரிவினைகள் தவறானது என்பது
எனது அபிப்ராயம். இதை மடல்4ல் சொல்லியுள்ளேன். > [2] யூதர்களின் மதமும் அவர்களின் புனித நூலும் என்ன?
> எனக்கும் யூதமதம் பற்றி ஓரளவிற்குதான் தெரியும், முழுமையாக பல யூத வழக்கங்களைப் பற்றி தெரியாது.
பண்டைய இந்து மதத்திற்கும், பண்டைய யூத மதத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகக் கூட கூறுகி
றார்கள். அதே சமயம் இரண்டும் எதிரெதிரானது என்று கருதுவோர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் நான்
கேள்விப்பட்ட ஒரு விஷயம், பல தென்னிந்திய உணவகங்களை கோஷர்(யூதக் கோட்பாடுகளின் படி தூய்மையான)
என்று அமெரிக்காவின் யூத அமைப்புகள் அறிவித்துள்ளன என்பது. யூத மதம் பற்றி ஏற்கெனவே ஒருவர் மரத்தடியி
ல் எழுதியிருப்பதாக மதி குறிப்பிட்டிருந்தார்கள். அதைப்படிக்கவேண்டும் என நினைத்துக் கொண்டுள்ளேன். > [3] யூதர்கள் ஜெருசலேம் நோக்கித் தொழுததன் காரணம் என்ன? நபியவர்கள் தொழ
> மெக்காவைத் தேர்ந்தெடுக்க காரணங்கள் என்ன? (கபஹ்துல்லா இருக்கும்.. என்று
> எழுதியிருக்கிறீர்கள். யார் அவர்?)
அந்தக் காலத்தில் (1400 வருடங்களுக்கு முன்பு இருந்த அரேபியவில்) பல குழுக்கள் ஒவ்வொரு திசை நோக்கி
தொழுது கொண்டிருந்தனர் என்கிறது திருக்குரான். யூதர்கள் புனிதமாகக் கருதிய ஜெருசலேம் நகரை நோக்கி
முகமது நபியும் அவரைப் பின்பற்றியவர்களும் தொழுது வந்தார்கள். யூதர்கள் ஜெருசலேம் நகரை நோக்கி
தொழுதார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இணையத்தில் தான் தேடிப் பார்க்கவேண்டும்.கபா மசூதி
யைத்தான் கபஹ்துல்லா என்று முஸ்லீம்கள் அழைக்கின்றனர்.
>
> [4] இஸ்லாம் சாலமன், ஆபிரகாம், மோசஸ், ஏசுநாதர் போன்ற யூதர்களை
> ஏற்றுக்கொள்கிறதே... என்று சொல்லியிருக்கிறீர்கள். இதனை விளக்கவும்.
>
மடல் 4ல் விளக்கியுள்ளேன் பிரசன்னா.
> [5] திருக்குரான் வசனம் 3:112 வைச் சொல்லி, அடுத்த வரியாக "அல்லாஹ்வே
> அவர்கள் தப்பிக்கமுடியாது என்று கூறியிருக்கிறார் என்பதுதான் ஒவ்வொரு முஸ்லீமின்
> மனதிலும் குரான் படிக்கும்போது ஓடும்" என்று சொல்லியிருக்கிறீர்கள். இதை எப்படி
> ஏற்பது?
எதாவது ஒரு குரான் தளத்திற்கு சென்று இந்த வசனத்தை படித்துப் பாருங்கள். கூகிளில் இந்த எண்ணையிட்டு
தெடிப்பாருங்கள். நேரமிருந்தால், இஸ்லாமிய வலைத்தளங்கள், ப்ளாக்குகளைப் பாருங்கள், நம்புவீர்கள்.
இதேபோல் பல இடங்களில் நீங்கள் பொதுப்படுத்தியிருக்கும் விஷயங்கள் நம்ப
> இயலாதவையாக இருக்கின்றன. குர்துகளின் மீது நடந்த அட்டகாசங்களின் போதும்
> துருக்கியில் நடக்கும் மனிதப் படுகொலைகளையும் முஸ்லீம்கள் அனைவரும் ஏற்றார்கள்
> என்பது போன்ற ஒரு பொதுப்படுத்தலை உங்கள் வரிகள் உண்டாக்குகின்றன. இதை
> ஏற்பதற்கில்லை. "பாஸ்தீனத்திற்கு உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் கொடி
> பிடிக்கிறார்கள்; அங்கு சென்று சண்டை போடத் தயாராக இருக்கிறார்கள்" என்று
> சொல்லியிருக்கிறீர்கள்.
இன்றைய சூழலில் நல்ல உதாரணம் ஈராக். அமெரிக்கா ஈராக்கை எதிர்த்து குளித்துறை முஸ்லீமிலிருந்து
கூத்தாநல்லூர் முஸ்லீம் வரை கொடி பிடிக்கிறார்கள். அதே ஈராக்கில் சதாமால் விஷப்புகையிட்டு
கொல்லப்பட்ட் குர்துக்களுக்காக இந்தியாவில் ஒரு இடத்தில் போரட்டம் நிகழ்ந்தது என்று கூற முடியுமா
உங்களால்? இன்று சூடானில் நடந்து கொண்டிருக்கிற கறுப்பின முஸ்லீம்களுக்கெதிரான எத்னிக் க்ளீன்ஸிங் பற்றி
எந்த இஸ்லாமியராவது இங்கே கொடிபிடிக்கிறார்களா? இல்லையே. எப்போது இஸ்லாமியர்கள், முஸ்லீம் அல்லாதவர்களால் சரியாக நடத்தப் படவில்லையோ அல்லது சரியாக
நடத்தப் படவில்லை என்ற எண்ணம் மேலோங்குகிறதோ அப்போது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பி
ரதேசங்களிலெல்லாம் பெரும் போராட்டங்களும், வன்முறைகளும் வெடிக்கிறது. ஆனால் ஒரு முஸ்லீம் இன்னொரு
முஸ்லீமை கொடுமைப் படுத்தும் போது, எந்த ரியாக்ஷனும் ஏற்படுவதில்லை. சதாம் குவைத்தை ஆக்கிரமித்த
போது எனக்குத் தெரிந்து எந்த முஸ்லீமும் இந்தியாவில் போராடவில்லை. ஆனால், அதைத் தொடர்ந்து
சதாமை அமெரிக்கா தாக்கியபோது தமிழகத்திலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல கண்டன ஊ
ர்வலங்கள், போராட்டங்கள் நடைபெற்றன.
தீவிர மதப் பற்றாளர்களை ஒட்டுமொத்த முஸ்லீம்களோடு
> சமமாகப் பார்க்கிறீர்கள் என்கிற கேள்வியை முன்வைக்கிறது உங்கள் வரிகள். ஹிந்துத்
> தீவிரவாதிகளை மனதில் கொண்டு ஹிந்துக்களை எடை போட முடியாது என்பது போல
> முஸ்லீம் தீவிரவாதிகளைக் கொண்டு முஸ்லீம் மதத்தின் ஒட்டுமொத்த மக்களையும் எடை
> போடமுடியாது. ஏற்கிறீர்களா?
>
ஒட்டு மொத்தமாக அனைவரையும் பழி சொல்லவில்லை. எப்படி சொல்ல முடியும்? நாம் அனைவரும் எதாவது ஒரு
காலகட்டத்தில் முஸ்லீம்களின் அன்பில் திளைத்திருக்கிறோம். எல்லோர் மனதிலும் வன்முறையோ, மதவெறியோ
இல்லை. அப்படி இருந்தால், நிலைமை மிகவும் வருத்தம் தரக்கூடியதாக இருக்கும். ஆனால், ஒரு மதவாதி திருக்குரானை மேற்கோளிட்டு, தனது தீவிரவாதம், வன்முறை சரிதான் என்று வாதிடும்
போது, மிதவாதிகள் வாயடைத்துப் போய்விடுகிறார்கள்.இதனால் தான் நான் எனது மடல்களின் மூலம்
ருமி அவர்களிடம் இஸ்லாமிய மத நூல்களில், கொள்கைகளில் மாற்றம் கொண்டு வாருங்கள் என்று கேட்கிறேன்.
மதத்தை பொது இடத்திற்கு கொண்டு வரக்கூடாது. அது மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயமாக இருக்க
வேண்டும். அனைத்து மதங்களிலும் மாற்றங்கள், சீர்திருத்தங்கள் வந்து விட்டன (அல்லது வந்து கொண்டு இருக்கி
ன்றன). இஸ்லாமிய சமுதாயம் இந்த வகையில் பின் தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.
நீங்கள் சொன்ன பின் எனது மடல்களை திரும்ப படித்துப் பார்த்தேன். பல இடங்களில் மதவாத முஸ்லீம்களை குறி
க்கும் எண்ணத்தில், முஸ்லீம்கள் என்று பொதுப்படையாக உபயோகித்துள்ளேன் என்று கண்டேன். தவறுதான். இனி
மேல் சரி செய்து கொள்கிறேன்.
> [6] "திரும்பத் திரும்ப ஓதி, மதராஸாக்களில் போதித்து..." - பல சிறுவர்கள்,
> இளைஞர்கள் மற்றும் இளமையைக் கடந்தவர்கள் அனைவரிடமும் விசாரித்துவிட்டுச்
> சொல்கிறேன். பாகிஸ்தானில் உள்ள மதராஸாக்களுக்கு சென்று பார்த்துவிட்டு, ஜிஹாத் பேக்டரி என்ற தலைப்பில் ஒரு அமெரி
க்க டைம்ஸ் பத்திரிகையில் ஜெப்ரி கோல்ட்பெர்க் என்ற பத்திரிகையாளர் கட்டுரை எழுதியிருந்தார். அதில்
எப்படியெல்லாம் சிறார்களூக்கு பிற மதத்தவர் மேல் வெறுப்பு ஏற்படுத்தப் பட்டுவருகிறது என்று விவரமாக எழுதி
யிருந்தார். http://www10.nytimes.com/library/magazine/home/20000625mag-taliban.html
http://www.fisiusa.org/fisi_News_items/news28.htm பாகிஸ்தான்(முஷாரப்) அரசும் சமீபத்தில் மதராஸாக்கள் பயங்கரவாதத்தின் விளைநிலமாக இருக்கின்றன
என்பதால், அவற்றின் மீது பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. இதில் இந்தியா மிகவும் பின் தங்கியிருக்கிறது. 1998ல் ஐபி இராஜஸ்தானில் பார்டர் ஏரியாக்களில் தி
டீரென ஏராளமான மதராஸாக்கள் தோன்றியதைப் பற்றி கவலை தெரிவித்தது. சென்ற வருடமும், இந்திய-
நேபாள் எல்லையில், முஸ்லீம்களே இல்லாத பகுதிகளில் கூட நிறைய மதராஸாக்கள் தோன்றியது பற்றியும்
பாதுகாப்பு அமைப்புகள் கவலை தெரிவித்தன.இவை ஐ.எஸ்.ஐயின் தலங்களாக உபயோகிப்படுகின்றன என்ற ஐயம்
எழுந்தது. ஆனால், உண்மையில் மதராஸாக்களில் என்ன சொல்லிக் கொடுக்கப் படுகிறது என்பது
பற்றி அரசுக்கோ, பொது சமுதாயத்திற்கோ தெரியாது. எத்தனை மதராஸாக்கள் எந்தெந்த பகுதிகளில்
இருக்கின்றன என்பது கூட ஓரளவிற்குத்தான் தெரியும், அதுவும் கூட மத்திய அரசு மதராஸாக்களுக்கு ஆசிரி
யர்கள் நியமனம் செய்து கொள்ளுவதற்கு உதவித்தொகை வாங்கும் மதராஸாக்கள் பற்றிய தொகுப்புதான்
உள்ளது. இந்தியாவில் பல மதராஸாக்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சவுதி ஷேக்குகளின் நிதியுதவி
யுடன் நடத்தப் படுகின்றன. இங்கெல்லாம் என்ன சொல்லிக் கொடுக்கப் படுகிறது, என்ன நடக்கிறது என்பது
யாருக்கும் தெரியாது. நிறைய பேருக்கு ஓதப்படும் திருக்குரானில் உள்ள வரிகளுக்கு முழுமையான
> அர்த்தம் தெரியவில்லை. சிலருக்கு அங்கங்கு கொஞ்சம் புரிந்திருக்கிறது. ஹிந்துக்
> கடவுLகளை நமஸ்கரிக்கும்போது சொல்லப்படும் சமிஸ்கிரத சுலோகங்கள் எப்படி
> புரியாது பலரால் சொல்லப்படுகின்றதோ அப்படித்தான் பல முஸ்லீம்கள் திருக்குரானை
> ஓதுகிறார்கள் என்று தோன்றுகிறது. அதனால் பொருளுணர்ந்து, அன்றைய சூழலில்
> சொல்லப்பட்ட கருத்துகளின் தொகுப்பான திருக்குரானை இன்றும் அவர்கள் மனதில் ஏற்றி,
> வெறுப்பை வளர்த்துக்கொள்ள வைக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைப்பது கொஞ்சம்
> அதீத கற்பனை + பயம் என்று நினைக்கத் தோன்றுகிறது. உங்கள் கருத்தென்ன? நீங்கள்
> சொல்லும் கருத்துகள் இந்திய/தமிழ்நாட்டு முஸ்லீம்களிடத்தில் காணத்தக்கவையானதென்றே
> நம்புகிறீர்களா? இல்லை பிரசன்னா. இதில் முக்கியமானதொரு வித்தியாசம் இருக்கிறது. நாம் கோவிலுக்குப் போகிறோம்.
புரியாத மொழியில் அர்ச்சகர் எதோ உச்சரிக்கின்றார். கடவுளை நினைத்து மனதினுள் பிரார்த்தித்துக்
கொண்டு வந்து விடுகிறோம். அத்தோடு அது முடிவடைகின்றது. ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில், தொழுகையின் போது திருக்குரான் வசனங்களை ஓதி, அவை அரபி மொழியி
ல் இருந்தாலும் அவற்றுக்கான விளக்கங்கள், அவை பற்றிய இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களை அப்பகுதி
முஸ்லீம்களின் தாய் மொழியில் எடுத்தியம்புகிறார்கள். இதனால், எல்லோருக்கும் இல்லையென்றாலும், பலருக்கும் அர்த்தம் போதிக்கப் படுகிறது. நான் ஏற்கெனவே ஒரு
மடலில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தவுடன் கலவரங்கள் நடக்கின்றதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு
இதுதான் காரணம்.
- நேசகுமார் -
Posted at 11:56 pm by NesaKumar
Permalink
Discussion on Islam - Palestine
> இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் 'யூத வெறுப்பு' என்று பார்ப்பது ஒற்றைப் பரி
> மாணப் பார்வை. அடிநாதமாக அதுவும் காரணமாக இருக்கலாம், இருக்கவே முடியாது
> என்று நான் சொல்ல வரவில்லை.
>
> இது 'புனித இட'த்துக்கு சொந்தம் கொண்டாடும் போராட்டம். நூற்றாண்டு காலமாக
> நடப்பது.
> பார்க்க: http://www.npr.org/news/specials/mideast/the_west/
> (Brittanica Encylopedia-விலும் மத வரலாற்று நிகழ்வுகள் பற்றிப் படித்தேன். அது
> இலவசம் இல்லை என்பதால் சுட்டி தர முடியவில்லை.)
> பரிமேல்ஸ், இருக்கலாம். நீங்கள் சொல்வது போல யூத வெறுப்பு மட்டுமே பாலஸ்தீன பிரச்சினையின் அடிப்படை என்று
கருதுவது தவறாக இருக்கலாம். இந்த 'புனித இடம்' என்று சொந்தம் கொண்டாடுவது (தற்போதைய) இஸ்லாமி
ய கோட்பாடுகளின் அடிப்படையில் சரியே. நான் பல மடல்களில் கூறியுள்ளது போல இயேசுநாதரும், மோசஸ
ம் தமக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும் போது அவர்களுடன் சம்பந்தப் பட்ட தலங்களையும்
சொந்தம் கொண்டாடுவது தவிர்க்க இயலாதது என்றுதான் நான் நினைக்கிறேன். சிலுவைப் போர்களே, முஸ்லீம்களிடமிருந்து கிறிஸ்துவர்களின் புனித இடங்களை மீட்பதற்காக ஏற்பட்டவைகள்
தாம். இராமரையும் ஒரு இஸ்லாமிய இறைத்தூதர், ஆதலால் அவர் பிறந்த இடத்தை தூய்மைப்
படுத்துவதற்காகவே அங்கு ஒரு மசூதி கட்டப் பட்டது என்று கருதும் இஸ்லாமியர்களும் உள்ளனர். மதத்தின் பெயரால் நடக்கும் இந்தக் கூத்துகளையெல்லாம் பார்க்கும்போது, மத நம்பிக்கையுள்ள எனக்கே சில
சமயம் வெறுப்பு ஏற்படுகிறது.அதனால் தான் உஷா, ரமேஷ் போன்றவர்கள் மதமே வேண்டாம் என்று
சொல்லும்போது அதுவும் சரியோ என்று கூட பல சமயங்களில் தோன்றுகிறது. - நேசகுமார் -
Posted at 11:48 pm by NesaKumar
Permalink
Discussion on Islam - Blasphemy
"nesa_kumar2003" <nesa_kumar2003@y...>
Date: Fri Sep 10, 2004 7:04 pm
Subject: Discussion on Islam - Reply to Sabu ( Sadayan )
>இஸ்லாத்தைப் பற்றி சரியான புரிதலின்றி எழுதிக்கொண்டிருக்கிறார்.
>எடுத்துக்காட்டாக அல்லாஹ்வை பழித்தாலும் கண்டுக் கொள்ளமாட்டார்கள் னால் நபி(ஸல்) அவர்களை பழி
>த்தால் பொங்கி எழுவார்கள் என்று எழுதுபவரிடம் ஏன் 'மல்லுக்கட்டுவானேன் 'என்பதாலேயே மெளனம். சாபு, உஷாவுக்கு எழுதியிருந்த மடலில் மேலே உள்ளதை எழுதியிருந்தீர்கள்.நான் எழுதியது தவறான புரிதல் அல்ல
என்றுதான் நினைக்கிறேன். உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு
முன்பு, நைஜீரியாவில் அழகிப் போட்டியை அங்கிருந்த அடிப்படைவாத முஸ்லீம்கள் எதிர்த்தனர். இந்த மத அடிப்படை வாதத்தை எதிர்த்து , அழகிப் போட்டியை ஆதரித்து எழுதிய இஸியோமா டேனியல் என்ற
பத்திரிகையாளர் தமது கட்டுரையில், ` இவ்வழகிகளை முகமது நபி கண்டிருந்தால், தமக்கென ஒரு மனைவி
யை அவர்களிலிருந்து தேர்ந்தெடுத்திருந்திருப்பார்' என்ற எழுத, இந்த ஒரு வரியால் மிகப் பெரிய கலவரம்
ஏற்பட்டு இருநூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டனர். கிறிஸ்துவர்களின் வியாபாரத்தலங்கள் எரிக்கப்
பட்டன(எழுதியவர் கிறிஸ்துவப் பெண்). அந்தப்பெண்மனியும் கைது செய்யப்பட்டார். அந்தக் கட்டுரையை வெளியி
ட்ட பத்திரிகை பொது மன்னிப்பு கோரியது. சரி, இதை செய்ததெல்லாம் முஸ்லீம்கள் அல்ல, மதவெறியர்கள் தாம் என்று நீங்கள் கூறலாம். ஆனால்,
நைஜீரிய அரசும் அப்பெண் செய்தது தவறு என்று கூறியது. அங்கே ஒரு மாநிலமான
சம்பாரா, அப்பெண்ணுக்கெதிராக பத்வாவிட்டது. சம்பாரா மாநிலத்தின் டெபுடி கவர்னர் முகம்மது சின்காபி,
திருக்குரானின் படி அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனைதான் சரியான இஸ்லாமிய தண்டனை என்றார். முகமது நபி
யைப் பற்றிய எழுதியவுடன், தீவிர இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா சும்மா இருக்குமா (ஒஸாமா
போன்றவர்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டுமல்லவா?), உடனே அங்கிருக்கும் இஸ்லாமிய அமைச்சகத்தின்
(Ministry of Islamic Affairs) அதிகாரியான ஷேக் சாத் அல் சாலா, அந்தப் பெண் தன் தவறை
உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே விட வேண்டும் இல்லாவிடில் அவர் கொல்லப்பட வேண்டும் என்றார்.
இஸ்லாமிய உலகில் பெரிய விவாதமே நடந்தது, இஸியோமா டேனியலை கொல்லக் கூடாது என்ற
முஸ்லீம் அறிஞர்கள் கூட, மன்னிப்பு கேட்டதால் அவரை கொலை செய்யக்கூடாது என்று (தான்) தெரிவித்தி
ருந்தனர். எழுதுகிறபோது, எடுத்துக்காட்டுக்கு முகமது நபியவர்களைப் பற்றிச் சொன்ன ஒரு harmless வரிக்கு இருநூறு
உயிர்கள் பலியாயின. இது எப்போதோ நடக்கவில்லை. வெறும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. இதில்
எங்கே என் தவறான புரிதல் இருக்கிறது சாபு? அப்படி ஏதும் தவறான புரிதல் இருந்தால் அது எனக்கு மட்டும்
இல்லை, உலக மக்கள் அனைவருக்கும் இருக்கிறது. இத் தவறான புரிதலை தெளிவிக்க வேண்டிய இஸ்லாமி
ய அறிஞர்கள், இப்படியெல்லாம் நடக்கவே இல்லை என்று சாதிப்பது சரியில்லை.
இதுவும் கூட எதோ ஆப்ரிக்கா கண்டத்தின் ஒரு மூலையில் நடந்த , நம்மைப் பாதிக்காத விஷயம் என்று
தள்ளுபடி செய்யலாம். ஆனால், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் முகமது நபியைப் பற்றி பேசினால் மரண
தண்டனை. பாகிஸ்தானின் குற்றவியல் சட்டம் பிரிவு 295/c யின் கீழ் முகமது நபியைப் பற்றி பேசினால்
மட்டுமல்ல,முகமது நபியவர்களைப் பற்றி மறைமுகமாகவோ, செய்கை மூலமாகவோ எதாவது தவறான எண்ணத்தை
ஏற்படுத்தினால் கூட மரண தண்டனைதான். (Whoever by words, either spoken or written or
by visible representation, or by any imputation, innuendo, or insinuation,
directly or indirectly, defiles the sacred name of the Holy Prophet
Mohammed (PBUH) shall be punished with death and shall also be liable to a
fine). அதே சமயம் திருக்குரான் பற்றி தவறாக பேசினால் வெறும்(!) ஆயுள் தண்டனைதான்.இதன் அர்த்தம்
என்னவென்று எனக்கு விளங்கவில்லை என்று சொல்லும் போது அதை என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
பாகிஸ்தானில், இச்சட்டத்தை பிரயோகித்து சலாமத் மாசி (எழுதப் படிக்கத் தெரியாத பன்னிரெண்டு வயதுச் சி
றுவன்) முகமது நபிக்கெதிராக சுவற்றில் கிறுக்கினான் என்று கூறி கைது செய்யப்பட்டான். லாகூர் செஷன்ஸ் நீதி
மன்றம் அவனுக்கு மரண தண்டனை வழங்கியது. சான்றுகளில்லாமல் தரப்பட்டது அந்த மரண தண்டனை என்று
வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார். அந்த
சிறுவன் தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறான். இதை எப்படித் தவறான புரிதல் என்று கூறுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை சாபு. இவ்வழக்கின் போது
பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் அவர்களது Pakistan Penal Code (Blasphemy Law) பற்றி நி
றைய விமர்சனங்கள் எழுந்தன. லாகூரில்(பாகிஸ்தான்) நீதிபதியாயிருந்த ஜஸ்டிஸ். நாசீர் அக்தர் முகமது
இந்த அவதூறு சட்டத்தின் படி கோர்ட், கேஸ் எல்லாம் கூடாது, அவதூறாகப் பேசுபவர்களை அந்த இடத்தி
லேயே கொல்வது ஒவ்வொரு முஸ்லீமின் மதக் கடமை என்று தெரிவித்தார். இவ்வாறெல்லாம் பேசுபவர்கள் எதோ ஒசாமா பின் லேடன் வகை தீவிரவாதிகள் அல்ல. சமுதாயத்தில் மதி
க்கத் தக்க பொறுப்புகளில் இருப்பவர்கள். எனக்கு இஸ்லாம் பற்றிய தவறான புரிதல் இருக்கிறது என்றால்
இவர்களையெல்லாம் எந்த பட்டியலில் சேர்ப்பது சாபு? உங்களுக்கு எடுத்துக் காட்டாக இரண்டு சம்பவங்களை விவரித்தேன். முகமது நபியவர்களைப் பற்றி குறை கூறி
னார்கள் என்பதற்காக இஸ்லாம் துவங்கிய நாளிலிருந்து தொடர்ந்து முஸ்லீம் அல்லாதவர்கள் கொல்லப் பட்டு
வருகின்றனர். நபிகள் காலத்திலேயே, அவரின் அனுமதியுடன் அவருக்கெதிராக கவிதைகள் எழுதி
ய அஸ்மா, அபு அபக், அவரைப் பார்த்து கேலியாக சிரித்த நாதிர் போன்ற பலர் கொல்லப் பட்டனர். இதெல்லாம் தவறு , நான் இஸ்லாம் பற்றி புரியாமல் எதோ தெரியாத்தனமாக எழுதுகிறேன் என்று உங்களுக்குத்
தோன்றினால், அப்படி நினைக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன என்னால் சொல்ல
முடியும்?
- நேசகுமார் -
Posted at 11:47 pm by NesaKumar
Permalink
Reply to Badri on Islam - Mail 4
கூற்று 4 - நபிகள் புத்தகங்களுடையோருக்கு (people of the book - Christians and Jews)
உரிமைகள் சிலவற்றை பின் கொடுத்தது உண்மைதான்.ஆனால் அது அன்றைக்கு வேண்டுமானால்
தாராளமானதொன்றாக இருந்திருக்கக்கூடும். இன்றைய நிலையில் அவற்றை மிகவும் கொடூரமான செயல்கள்
என்றுதான் மதிப்பீடு செய்ய
வேண்டியிருக்கிறது. உதாரணமாக ஒரு திம்மி கோர்ட்டில் சாட்சி சொல்ல முடியாது, அவனது மத வழி
பாட்டுத்தலத்தை இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தை விட உயர்வாக கட்டிக்கொள்ள முடியாது, முஸ்லீம்
ஒருவன் அவனை அடித்தால் திருப்பித்தாக்க முடியாது, ஒட்டகத்தில் உயர அமர்ந்து சவாரி செய்ய
முடியாது..இப்படிப்போகிறது அந்த ' சலுகைகள் ' . :: --------------------------------------------------------- :: நான் இது சம்பந்தமாக சான்றுகள் வைப்பதற்கு முன் புத்தகங்களுடையோர் (அஹ்ல் அல் கிதாப்,- People of
the Book, திம்மிக்கள், வேதங்களுடையோர், zimmies என்ற பல பெயர்களை இம்மடலில் பயன் படுத்தி
யுள்ளேன்) என்றால் என்ன என்பது சம்பந்தமாக சிறு விளக்கம் அளிக்கிறேன்.
முதன் முதலில் இந்த கருத்து யூத மதத்தில் தோன்றியது. இறைவனிடமிருந்து வசனங்கள் பெற்ற கூட்டத்தாராக
யூதர்கள் தங்களை கருதிக்கொண்டனர். இன்று இஸ்லாம் கொண்டிருக்கும் ஜிஹாத்( புனிதப் போர்) எனும் தீவி
ரவாதம் கூட யூதர்களிடமிருந்து தோன்றியது தான். அவர்கள் தாம் முதலில் மற்ற கடவுள்களைக்
கொண்டிருந்தோருக்கு எதிராக தம் கடவுளின் பெயரால் போர் தொடுத்தனர். ஆனால், தம் வினை தன்னைச்
சுடும் எனும் பழமொழிக்கேற்ப, பிற்பாடு இக்கருத்துக்களால் யூதர்கள் தாம் மிக மோசமாக பாதிக்கப்
பட்டார்கள்.
இஸ்லாம் இக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, சிறிது மாற்றி, யூதர்கள் தாம் உண்மையான கடவுளின் மதத்தையும்,
கடவுளினால் அனுப்பப் பட்ட புனித புத்தகத்தையும் மாற்றி விட்டார்கள் என்று திருப்பிப் போட்டு விட்டது. நான் ஏற்கெனவே இஸ்லாத்தின் சில அடிப்படை கோட்பாடுகளை முந்தைய மடல்களில் விளக்கியிருந்தேன். அதன்
படி, இஸ்லாம் என்பது முகமது நபியவர்கள் தோற்றுவித்த மதம் அல்ல, தொன்று தொட்டு இருந்து வருவது.
முகமது நபியவர்களுக்கு முன்பே அல்லாஹ் உலகிற்கு பல இறைத்தூதர்களை அனுப்பி அவர்களின் மூலம் மக்களை
நல்வழிப்படுத்த முயன்றார். இவ்விடத்தில் தான் ஆபிரகாம், மோசஸ், இயேசு நாதர் போன்றோர்கள் குறிப்பிடப் பட்டவர்கள். இஸ்லாத்தி
ன் பார்வையில் இவர்கள் எல்லாம் முஸ்லீம்கள். இறைவனால் இஸ்லாத்தை பரப்பப் படுவதற்காக அனுப்பப்
பட்டவர்கள். இவர்களைப் போன்றே உலகின் பல பாகங்களுக்கும் இறைத்தூதர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்
பட்டார்கள்.
"இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றி
லும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார் அவர் முஷ்க்குகளில் இணைவைப்போல்) ஒருவராக
இருக்கவில்லை"
- திருக்குரான் வசனம் 3:67 -
இத்தூதர்கள் அல்லாஹ்வின் வசனங்களை பரப்பினார்கள் என்று திருக்குரானே சொல்கிறது. திருக்குரான் என்பது
சொர்க்கத்தில் தங்கத் தகட்டில் எழுதி வைக்கப் பட்டுள்ள நிரந்தரமான ஒரு கட்டளை என்றும் ஒரு கருத்து நிலவுகி
றது. இதை அல்லாஹ் பல முறை பூமிக்கு அனுப்பிய போதிலும், மக்கள் அவற்றை பாழ் படுத்தி, தமது
சொந்தக் கதைகளையும், கற்பனைகளையும் அவற்றில் சேர்த்து மாற்றி விட்டதாக இஸ்லாம் கருதுகிறது.
உண்மையான இறைவாக்கை அசுத்தப் படுத்தி விட்டதாக( தி.கு. வசனம் 3:78) திருக்குரானில் அல்லாஹ் கூறுகி
றார். இந்நிலையில் ஆபிரகாம் சொன்ன உண்மையான இறைவாக்கை மக்கள் (யூதர்கள்) திரித்து விடவே
மோசஸை அல்லாஹ் அனுப்பியதாகவும், அதையும் (யூதர்கள்) திரித்துவிடவே, இயேசுவை அனுப்பி
யதாகவும் , அதையும் (யூதர்களும், கிறிஸ்துவர்களும்) திரித்து விடவே முகமது நபியவர்களை அனுப்பி நேர்வழி
யை (திகு.வசனம் 3:73) போதித்தாகவும் திருக்குரான் கூறுகிறது. இதையெல்லாம் கூறி, யூதர்களையும் , கி
றிஸ்துவர்களையும் மனந்திருந்தி முகமது நபியவர்களை இறைத்தூதராக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகோள் (அல்லது
வேண்டுகோள் போன்று தோன்றும் கட்டளை) விடுக்கின்றது( தி.கு 3:70, 10:37 & 3:71).
ஆனாலும், கடவுளின் வசனங்களுள் சிலதை பின்பற்றுவோர் என்ற வகையில் ஏற்பட்டதே இந்த புத்தகங்களுடையோர்
என்ற கோட்பாடு. பின்னாளில், இந்தியாவில் சில முஸ்லீம் மன்னர்களும், இஸ்லாமிய அறிஞர்களும் இந்துக்களி
டமும் இறைவசனங்கள் இருப்பதை கண்டு, இந்துக்கள் காபிர்கள் அல்ல, வேதக்காரர்கள் என்று கருதி
னார்கள். அதன் படி, இந்துக்களுக்கு சில சலுகைகளையும் வழங்கினார்கள்.
இஸ்லாத்தின் படி உலகில் வாழும் மக்கள் மூன்று வகையாக பிரிக்கப் படுகிறவர்கள்:
1. முமீன்கள் அல்லது முஸ்லீம்கள் - இவர்கள் தூய இறைக்கட்டளைகளை (திருக்குரான்) வைத்திருப்பவர்கள். ஏக
இறைவனை வணங்குபவர்கள். முகமது நபியை இறைத்தூதராக ஏற்றுக்கொள்பவர்கள். இதிலும் சில, சில
வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக காதியான்கள் எனப்படும் அகமதியா முஸ்லீம்கள், முகமது நபிதான் கடைசி
தூதர் என்பதை ஒப்புக் கொள்வதில்லை. அது போலவே பாஹாய் பிரிவைச் சார்ந்தவர்களும் பஹாவுல்லாஹ்
என்பவர் முகமது நபிக்குப் பின் இறைவனால் அனுப்பப் பட்ட தூதர் என்று கருதுகிறார்கள். இங்குள்ள கர்னாடக
மாநிலத்தில் தோன்றிய ஒரு முஸ்லீம் பிரிவு தம்முடைய தலைவர் ஒரு இறைத்தூதர் என்று கருதுகிறது. ஆனால்
இப்பிரிவுகளை முஸ்லீம்கள் வரிசையில் சேர்ப்பதை பெரும்பாலான சுன்னி முஸ்லீம்கள் எதிர்க்கின்றனர். ஷியா பி
ரிவு முஸ்லீம்களை க் கூட இப்பிரிவில் சேர்ப்பதை தாலிபான், வஹாபி போன்ற முஸ்லீம் தீவிரவாத
இயக்கங்கள் எதிர்க்கின்றன. இவற்றைப் பற்றியெல்லாம், நேரம் கிடைத்தால் ஒரு தனி மடலில் எழுதுகிறேன். 2. முஷ்ரிக்குகள் அல்லது காபிர்கள் - இவர்கள் பல கடவுள்களை வணங்குபவர்கள். கடவுளுக்கு இணை
வைப்பவர்கள் (அதாவது கடவுளின் மைந்தன், மனைவி, மகள் இது போன்று ). சிலை வழிபாடு செய்பவர்கள்.
நெருப்பை வணங்குபவர்கள். அசுத்தமானவர்கள். இவர்களை அழித்து இவர்கள் இருக்கும் பகுதிகளான தாருல் ஹர்ப்
ஐ முஸ்லீம்கள் வாழும் தாருல் இஸ்லாமாக மாற்றுவது ஒவ்வொரு முஸ்லீமின் புனிதக் கடைமை என்கிறது இஸ்லாம்.
இதர்க்காக முஸ்லீம்கள் புனிதப் போர்(ஜிஹாத்) புரிவது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கட்டாயமாக்கப்
பட்டுள்ளது. காபிர்களுடன் நட்பு கொள்வது திருக்குரானால் தடை செய்யப் பட்டுள்ளது. காபிர் பெண்களை
மணந்து கொள்வதும் தடை செய்யப் பட்டுள்ளது (மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ளத் தடையில்லை - பாகி
ஸ்தானில் இப்போது சகஜமாக இந்துப்பெண்களை கடத்திக் கொண்டுபோய் மதம் மாற்றி திருமணம் செய்து
கொள்கின்றனர். அந்தப் பெண் மணமான பெண்ணாக இருந்தால் கூட அவளின் இந்துக் கணவனால் ஒன்றும் செய்ய
முடியாது, ஏனெனில் முஸ்லீமாக அவள் மாறிய பிறகு, அவனால் அவளை மீட்க ஷரியத் சட்டம்
ஒப்புக்கொள்ளாது). காபிர்களின் சிலைகளை உடைத்து அவர்களது வழிபாட்டுத் தலங்களை இஸ்லாத்துக்கு
எடுத்துக்கொள்வது இறைக்கடமையாக்கப் பட்டுள்ளது. 3. புத்தகங்களுடையோர் (People of the Book) - இவர்கள், இறைவனிடமிருந்து அனுப்பப் பட்ட
வசனங்களை பிறழ்ந்த முறையில் (corrupted form) வைத்திருப்பவர்கள். இவர்களை சகித்துக் கொள்ளுமாறு
முஸ்லீம்களுக்கு அல்லாஹ் திருக்குரானில் கூறுகிறார். இவர்களுக்கு பாதுகாப்புத் தொகை (ஜிஸ்யா) பெற்றுக்
கொண்டு ஒரு முஸ்லீம் நாடு பாதுகாப்பு கொடுக்கலாம். ஜிஸ்யா கொடுத்துக் கொண்டிருக்கும் வரையில் அவர்கள்
பொறுத்துக் கொள்ளப்படுவார்கள் ( to be tolerated). அவர்களுக்கு பல உரிமைகள் (!) இஸ்லாத்தால்
வழங்கப் பட்டிருக்கின்றன. இவர்களின் பெண்களை முஸ்லீம்கள் மணந்து கொள்ளலாம்.
புத்தகங்களுடையோர் என்ற இந்தப் பிரிவை முகமது நபியவர்கள் அனுமதித்துள்ளது ஏன் என்ற கேள்வி அடிக்கடி
எழுகிறது. அதற்கு, பொருளாதார காரணங்கள் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. அந்தக் கால அரேபியாவில்
நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று யூதர்கள் விவசாயம் செய்து வந்தனர். அவர்களின் மீது அதீத வரியி
டப்பட்டு இஸ்லாமிய அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது. யூதர்களும் , கிறிஸ்துவர்களும் வியாபாரத்தில்
பெருமளவு ஈடுபட்டு வந்தனர். அதுவும் இஸ்லாமிய அரசுக்கு வருவாய் வர காரணமாயிருந்தது. ஆகவே,
யூதர்களையும், கிறிஸ்துவர்களையும் போர் புரிந்து வென்றாலும் அவர்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் படி
திருக்குரான் கட்டளையிடவில்லை.
இன்னொன்றும் கூறப்படுகிறது. முகமது நபியவர்கள் கிறிஸ்துவ மதத்தை அரபி மொழியில் ஒரு கிறிஸ்துவரிடமி
ருந்து பயின்றார் என்று ஆயிஷா கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது ( ஹதீஸ் என்னால் என்ன, அதன்
validity, அதைப்பற்றி ஷியா-சுன்னி பிரிவினரிடையே உள்ள மாறுபாடுகள் போன்றவற்றை வாய்ப்பி
ருந்தால் பிறகு மடலிடுகிறேன்). பல சமயங்களில் திருக்குரானில் யூத கோட்பாடுகளும், கிறிஸ்துவ
கருத்துக்களும் காணப்படுவதற்கு இதுவே காரணமென்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆகவே, உண்மையிலேயே
போனால் போகிறதென்று இத்தகைய ஒரு பிரிவை அனுமதித்ததாக பலர் கருதுகின்றனர் ( நான் தனிப்பட்ட
முறையில் இதை நம்பவில்லை. திருக்குரானை படிக்கும் போது பொருளாதார காரணங்களுக்காகவே
யூதர்களையும், கிறிஸ்துவர்களையும் பொறுத்துக் கொள்ளும்படி முகமது நபி பணித்துள்ளார் என்றே கருதுகிறேன்.
ஏனெனில் ஒரு இடத்தில் கிறிஸ்துவர்களுடன் நட்புடன் பழகக் கூடாது என்று அல்லாஹ் முஸ்லீம்களுக்கு அறிவுறுத்துகி
றார். இன்னும் பல வசனங்கள் இதைப்போன்று உள்ளன).
ஆகவே , யூதர்கள், கிறிஸ்துவர்கள் இன்னும் சில மதக்காரர்கள் ( பார்ஸிக்கள் மற்றும் அப்போதிருந்த சில பி
ரிவினர்) ஒரு முஸ்லீம் நாட்டில், முஸ்லீம்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிற வகையில், முஸ்லீம்களுக்கு ஜிஸ்யா வரி
கொடுக்கிற வரையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு சில உரிமைகள் வழங்கப்பட்டன. பின்னாளில், இது யூதர்களுக்கு பெரிய உபகாரமாய் தென்பட்டது. காரணம், கிறிஸ்துவர்களினால் அவர்கள்
persecute செய்யப்பட்டது. இயேசுநாதரின் இறப்புக்கு யூதர்கள் தாம் காரணம் என்று அந்தக்கால கிறிஸ்துவ
மக்கள் பலர் எண்ணினர். முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையே சிலுவைப் போர்கள் (crusade)
ஏற்பட்ட போது மதஉணர்வால் உந்தப்பட்ட கிறிஸ்துவ படைகளுக்கு யூதர்கள் இலக்காயினர். இந்நேரத்தில்,
யூதர்களுக்கு முஸ்லீம் நாடுகள் அஹ்ல்-அல்-கிதாப்(புத்தகங்களுடையோர்) என்ற பெயரில் அளித்த ' இரண்டாம்
குடிமக்கள் ' ஸ்தானம் மிகப் பெரிய சலுகையாக இருந்தது. உயிர் வாழவிட்டால் போதும் என்ற நிலையில்
இருந்த யூதர்களுக்கு, ஜிஸ்யா வரி கொடுத்து தங்களை காத்துக் கொள்வது ஒரு பெரிய luxury யாகவே
இருந்தது. பல சமயங்களில் இதனாலேயே, ஐரோப்பாவை தாக்கிய முஸ்லீம் படைகளுக்கு யூதர்கள் உதவி
செய்தனர். இன்றளவுக்கும், இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள், அறிஞர்கள் இதை பெரிய சாதனையாக கூறிக்கொள்கி
ன்றனர். இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். இன்றைய சூழலில் ஐரோப்பிய நாடுகள் தாம் யூதர்களுக்கு தவறி
ழைத்து விட்டதாக ஒப்புக் கொண்டு, பழைய தவறுகளுக்கு வருந்தவும் செய்கின்றனர். ஆனால், முஸ்லீம்
சமுதாயமோ, இன்றளவிற்கும் இரண்டாம் பட்ச குடிமக்களாகத்தான் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் கருதுகி
றது. முஸ்லீம் சமுதாயத்தின் பெருந்தன்மையை பற்றி கூறிக்கொள்கிற இஸ்லாமிய அறிஞர்களும் வரலாற்றாசிரி
யர்களும், இந்தியாவில் யூதர்கள் சரிசமமாக நடத்தப் பட்டதை கருத்தில் கொள்வதே இல்லை. மேலும், அன்று
இத்தகைய உரிமைகள் பெரிதாக இருந்திருக்கலாம், ஆனால் மனித சமுதாயம் தனிமனித உரிமைகளை கருத்தில்
எடுத்துக் கொள்கின்ற இன்றைய சூழலில் இவ்வுரிமைகள் கேலிக்கூத்தாக விளங்குகின்றன என்பதை உணர்ந்து
கொள்ள மறுக்கிறார்கள். பல்வேறு இஸ்லாமிய அரசுகள் பல்வேறு காலகட்டங்களில் புத்தகங்களுடையோருக்கு கொடுத்து வந்திருக்கின்ற உரி
மைகள்: - உயிருக்கு, உடமைக்கு, மரியாதைக்கு (இஸ்லாமிய அரசிடமிருந்து) பாதுகாப்பு
- முஸ்லீம் நாட்டில் வாழ உரிமை
- தம் மதக்கோட்பாடுகளின் படி (முஸ்லீம்களுக்கு தொந்தரவில்லாத வகையில்) வழிபடும் உரிமை
- வேலை செய்ய, வியாபாரம் செய்ய சுதந்திரம்
- திம்மிக்களுடைய பெண்களை முறையாக மணந்து கொள்ள முஸ்லீம்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர், அந்தப்
பெண்களை ஆசை நாயகிகளாக வைத்துக் கொள்வதோ, விபசாரிகளாக வைத்துக் கொள்வதோ அல்லாஹ் வால்
தடை செய்யப்பட்டுள்ளது ( நேர்மாறாக காபிர்களான பெண்களை 'மணந்து' கொள்வது தடை செய்யப்
பட்டுள்ளது. தி.கு.வசனம் 5:5) இவர்கள், ஜக்காத் என்ற இஸ்லாமிய வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டார்கள் (ஜிஸ்யா வரியின்
மூலம் அதைவிட அதிக வருவாய் ஈட்டப்பட்டது). இராணுவ பணிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப் பட்டனர் (
இதன் மூலம் இவர்களினால் இராணுவ ரீதியாக ஏற்படும் தொந்தரவுகள் தவிர்க்கப் பட்டன).
மேலே கண்ட உரிமைகள் வழங்கப் பட்ட அதே நேரத்தில் , பல கட்டுப் பாடுகளும் விதிக்கப்பட்டன:
- திம்மிக்கள் ஆயுதம் வைத்துக் கொள்ள அனுமதியில்லை ( இந்தியாவிலும் இது பின்பற்றப் பட்டது. ரஜபுத்தி
ரர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டது.சீக்கியர்கள் இதை எதிர்த்து ஆயுதம் வைக்க ஆரம்பித்தனர்.) - உயர் பதவி வகிக்க அனுமதி கிடையாது (இந்தியாவில், வேறு வழியில்லாமல் இது dilute செய்
Posted at 11:46 pm by NesaKumar
Permalink
Wednesday, September 08, 2004
Reply to Badri on Islam - Mail 3
கூற்று 3 - யூதர்களின் தேவை ஆரம்பக்காலத்தில் நபிகளுக்கு தேவைப்பட்டபோது அவர்களுக்கு உரிமைகள்
வழங்கபட்டன. பின், அவரது வலு கூடிய போது, குரைஷிக்களுடன் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு யூதர்களின்
தேவை குறைந்த போது, அவர்கள் மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டி, அவர்கள் அனைவரையும் கொன்று குவி
க்க உத்தரவு போட்டார். அவர்களது பெண்டு ,பிள்ளைகளை எதோ பண்டங்களை பகிர்வது போல அனைவருக்கும்
பகிர்ந்து (அடிமைகளாக) கொடுத்தார். இது அந்தக்கால வழக்கமாக இருக்கலாம். னால், இதையே இன்றைய
முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்கள். ஒரு மதப்பற்று கொண்ட முஸ்லீமின் பார்வையில் நபிகள் செய்த செயல்கள்
எல்லாக் காலகட்டத்திற்கும் பொருந்தியவை. இதுவே இன்றளவுக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் ஆணிவேராக
இருக்கிறது. ::------------------------------------------------------------------::
முகமது நபியவர்கள் மதீனா நகருக்கு அடைக்கலம் தேடிச் சென்றபோது ( கிபி 622 - ஹிஜ்ரி வருடம்
ஒன்று) அங்கே வடக்கு அரேபியாவின் மிகப் பெரிய யூத சமுதாயம் வாழ்ந்து வந்தது. மூன்று பெரும் யூத
வம்சங்கள் வாழ்ந்து வந்தன. அவை பானு-ல்-நாதிர், பானு-கைனுகா, பானு-குரைசா என்பனவாகும். இவை தவி
ர இரு பாகன் ( இந்துக்களைப் போன்றதொரு கூட்டத்தினர்) கூட்டங்களும் (tribes) இருந்து வந்தன. இந்த
பாகன்கள் தாம் முகமது நபியை மதீனா நகருக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். அவர்களுக்குள் நிலவிய
சண்டைகளை முகமது நபி தீர்த்து வைத்தார். யூதர்களுடன் சமாதான உடன் படிக்கையும் ஏற்படுத்திக்
கொண்டார். இப்பிரச்சினைகளை தீர்த்து வைத்து, மதீனாவில் ஆட்சி ஏற்படுத்திய போது
யூதர்களுக்கு அவர்களது மதத்தை பின் பற்ற முழு உரிமை உள்ளதாக அறிவித்தார். இதைத்தான் ருமி புத்தகத்தி
ல் குறிப்பிட்டிருக்கிறார் போன்று தெரிகிறது.
அரேபியாவில் யூதர்கள் மற்றைய அராபியர்களைக் காட்டிலும் வசதியாக வாழ்ந்து வந்தனர். அவர்களை
மற்ற அரபிக்கள் மிகவும் மதித்து வந்தனர். முகமது நபிக்கு முந்தைய காலத்தில், அரேபிய உயர்குடியினர்
யூத மதத்தை தழுவியதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலும், அவர்களது மத கட்டுக்கோப்பு காரணமாகவும், வி
வசாயம் செய்யும் ஒரே குடியினராக அவர்கள் இருந்து வந்ததாலும் அவர்கள் இவ்வாறு மதிக்கப்பட்டிருக்கலாம். விவசாயத்தையும் ( பேரீச்சை சோலைகளை பயிரிட்டு பராமரித்தல்), வியாபாரத்தையும் தொழிலாகக்
கொண்டிருந்தனர். முகமது நபியவர்கள் மதீனாவுக்கு வந்தபோது இவர்கள் பெரும் கோட்டைகளை கட்டிக்கொண்டு
செழிப்புடனும், சமுதாயத்தில் செல்வாக்குடனும் இருந்தனர். அராபிய சமுதாயத்தில் மிகவும் மதிப்புடன்
வாழ்ந்த இந்த யூதர்களை முகமது நபியும் மிகவும் மதித்தார். மதீனா நகரின் பெயர் யாத்ரிப் என்றும், மதி
ந்தா என்ற யூதப் பெயரிட்டு அதை அழைத்ததன் மூலமாக யூதர்களின் நன்மதிப்பை நபிகள் பெற்றதாகவும்
கூறப்படுகிறது. யூதர்கள் ஜெருசலேம் நகரை நோக்கி வழிபட்டு வந்தது போலவே 16-17 மாதங்கள் நபிகளும் தம்மைப் பி
ன்பற்றிய முஸ்லீம்களுடன் ஜெருசலம் நோக்கி வழிபட்டு வந்தார். திருக்குரானே தன்னை மோசஸக்கு வெளி
ப்படுத்தப்பட்டதின் அராபிய மொழியாக்கம் என்று தான் கூறிக்கொள்கிறது( இது பற்றி விரிவாக
புத்தகங்களுடையோர் பற்றி விளக்கும் அடுத்த மடலில் கூறுகிறேன்). பாகன்கள், சிலை வழிபாடு செய்து ஏனைய அராபியர்களைப் போலவே பல கடவுள்களை வணங்கி வந்தனர்.
யூதர்கள் யாரும் சிலை வழிபாடு செய்யவில்லை. ஏக இறைவனையே ஏற்றுக்கொண்டிருந்தார்கள் யூதர்கள்.
ஆனால் , முகமது நபியை இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். யூதர்களின் புனித புத்தகங்கள் தவறு
என்றும் குரானே உண்மையான, கலப்படம் இல்லாத இறைவனின் வாக்கு என்ற முகமது நபியின் போதனைகளை
இம்மூன்று குழுக்களுமே நிராகரித்தன. முதலில் நபிகள் பொறுமை காத்தார் (முதல் 16 மாதங்கள்). பிறகு யூதர்கள் தம்மை ஏற்றுக் கொள்ளாததால்,
ஜெருசலேமை விட்டு மெக்கா நோக்கி தொழ ஆரம்பித்தார். முதலில் யூதர்களைப் போன்று நாளுக்கு மூன்று
வேளை தொழுது கொண்டிருந்த முஸ்லீம்கள், ஐந்து வேளை தொழ கட்டளையிடப் பட்டனர். பின் (18வது
மாதம்), அவரை எதிர்த்து கவிதைகள் இயற்றிய கவிஞர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கொல்லப்பட்டனர். இதற்கி
டையில் யூதர்களின் பழக்கங்கள் போன்று தோன்றிய அனைத்து சம்பிரதாயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நபி
களவர்களால் மாற்றப்பட்டது. இன்று முஸ்லீம்கள் உபயோகிக்கும் மாதக்கணக்கு( காலண்டர்) அப்போது மாற்றப்
பட்டது தான். யூதர்கள் சூரியனை அடிப்படையாக வைத்து மாதங்களை கணக்கிடவே, நபிகள் சந்திரனை வைத்து
கணக்கிடும் முறைக்கு மாற்றினார். தங்களை யூதர்களிடமிருந்து பிரித்துக் காண்பித்த பின்னரும் யூதக் குழுக்கள் முஸ்லீமாக மாற மறுத்து விட்டனர்.
இதற்கிடையே பாகன்கள் (அராபியர்கள்) பெருமளவில் இஸ்லாத்துக்கு மதம் மாறினர். இந்நிலையில் யூதர்கள்
தம் மதத்தை பின்பற்றி வந்தது நபிகளுக்கு பெரும் மனக் கசப்பை உண்டு செய்தது. யூதர்களை பார்த்து
மற்ற அராபியர்களும், முஸ்லீம்களும் மனம் மாறிவிடலாம் என்று அவர் அஞ்சியிருக்கக் கூடும் (குரான்
வசனங்களை பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது). பின் (நபிகல் மெக்காவில் ஆட்சி அமைத்த 2 வருடத்திலிருந்து) ஒவ்வொரு யூதக் குழுவாக தாக்கப் பட்டது.
ஆனால் யூதர்கள் அனைவரும் சேர்ந்து போரிடவில்லை. ஒவ்வொரு குழு தாக்கப்பட்ட போதும், தாம் தாக்கப்
பட மாட்டோம் என்று நபிகளின் வாக்கில் நம்பிக்கை வைத்து அமைதியாருந்தனர். இவ்வாறாக அனைத்து
யூதர்களும் மதீனாவிலிருந்து விரட்டப் பட்டனர்(பின்னாளில் அரேபியாவிலிருந்தும், எஞ்சியவர்கள் கதி பற்றி தி
ம்மிக்கள் பற்றிய மடலில் குறிப்பிடுகிறேன்). ருமி தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் 'உலகின் முதல் சமயச்
சார்பற்ற பிரகடனம்', யூதர்களை பொய்யான ஒரு பாதுகாப்பு உணர்வை தோற்றுவித்து அவர்களை அழித்தொழி
த்து விட்டது. இது தான் நபிகளின் தாராளமனப்பான்மையின் பின்னனி. நபிகள் உலகின் முதல் சமயச்
சார்பற்ற சமுதாயத்தை உருவாக்கியதாகக் கூறும் ருமி, அதற்குப் பின்னர் நடந்த கொடூரங்களை மறைத்து வி
ட்டார் என்றே தோன்றுகிறது. நபிகளின் ஆட்சியில் யூதக்குழுக்களுக்கு நேர்ந்த முடிவு: 1. பானு-கைனுகா : இவர்கள் வியாபாரமும், நகை செய்யும் தொழிலையும் செய்து வந்தனர். வசதியாயி
ருந்தாலும் பிழைப்புக்கு மற்றவர்களை சார்ந்திருந்தனர்.இவர்களைத்தான் நபிகள் தம்மைப் பின்பற்றியோர் துணை
கொண்டு முதலில் தாக்கினார். கி.பி 624ம் ண்டு வாக்கில் அவர்களது கோட்டைகளை முற்றுகையிட்டார். 15
நாளில் தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைந்தனர். நபியவர்கள் முதலில் அவர்களில் ஆண்கள் அனைவரையும்
கொல்ல உத்தரவிட்டார். பின் அதனை மாற்றிக்கொண்டு, அவர்களது உடமைகளையும் , செல்வங்களையும்
முஸ்லீம்களிடம் ஒப்படைத்துவிட்டு , மதீனா நகரை விட்டு அகன்று விடுவதாக இருந்தால் கொல்லாது விடுவதாக
தெரிவித்தார். கைனுகா ஜாதியினர் ஒப்புக்கொண்டு தாம் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மதீனாவை வி
ட்டு அகதிகளாக வெளியேறினர். 2. பானு-ல்-நாதிர் : மூன்று குழுக்களிலுமே மிகவும் வசதியாக வாழ்ந்தவர் இந்த கூட்டத்தினர் தாம். நி
லச்சுவான் தார்களாகவும், வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாகவும், வியாபாரிகளாகவும் இருந்த இக்கூட்டத்தின்
கோட்டையை 626ம் ண்டு நபிகள் தம்மைப் பின்பற்றிய முஸ்லீம்களுடன் முற்றுகையிட்டார். இரண்டு வாரம்
போராடிய பிறகு, யூதர்கள் சரணடைந்தனர். சரணடைந்தவர்களின் சொத்துக்களையும், ஏனைய உடைமைகளையும்
பிடுங்கிக் கொண்டு அவர்களை மதீனா நகரை விட்டு செல்லும் படி நபிகள் உத்தரவிட்டார். நபிகள் காலத்தி
லேயே சிரியா போன்ற பிரதேசங்களுக்கு இவர்கள் துரத்தப்பட்டு விட்டனர்.
3. பானு-குரைசா : ஏனைய யூதர்கள் விரட்டப்பட்ட பின் இவர்களே எஞ்சியிருந்தனர். இவர்கள் விவசாயி
கள். மதீனாவின் தெற்கில் நிறைய கிராமங்களில் இவர்கள் இருந்து விவசாயம் செய்து வந்தனர். இவர்களில்
போரிடும் யூதர்களும் நிறைய பேர் இருந்தனர். இவர்களில் பல ஆண் மற்றும் பெண் புலவர்களும் இருந்தனர்.
இவர்களின் சில அரபி கவிதைகள் இன்றளவிற்கும் பிரபலம் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது தாம் நபி
யவர்கள் கடைசியாக போர் தொடுத்தார். அந்தக்கால அரேபியாவில் விவசாயம் செய்யத்தெரிந்தவர்கள்
யூதர்கள் மட்டுமே என்று கூறப்படுகிறது. ஆகவே, முழுக்க முழுக்க விவசாயிகளாக இருந்த இந்த யூதக்குழுவை
ரொம்ப நாளைக்கு( 6 வருடங்கள்) நபிகள் விட்டு வைத்தார் என்று சிலர் குறிப்ப்டுகின்றனர். மாறாக போரி
டும் வீர்ர்கள் இக்கூட்ட்த்தில் இருந்ததும் காரணமாய்ருக்கலாம். மற்றவர்களை எல்லாம் அழ்த்தப்றகு, உதவி
க்கு வர ஆள்ல்லாமல் இவர்க்ள் தனிமைப் படுத்தப்பட்ட பின் இவர்களை தாக்கியிருக்கலாம். கி.ப் 627ல்
மெக்கா நகரவாச்க்களை வென்ற பிறகு, மற்ற யூதர்களையெல்லாம் விரட்டிய பின்தான் முகமது நபி இவர்கள்
மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி போர் தொடுத்தார். அந்நிலையில் இவர்களுக்கு உதவி செய்ய யாரும்
இல்லை. மற்ற யூதகூட்டத்தாரைப் போன்று, நபிகள் போரிட்டு பின் தோல்வியுற்ற இவர்களை மதீனா நகரை வி
ட்டு ஓட விடவில்லை. ஆண்கள் அனைவரையும் கொன்று குவித்தார். ஆண்கள் எல்லோரையும் கொன்ற பிறகு எஞ்சி
யிருந்த பெண்களில் ரைஹானா என்ற யூதப் பெண்ணை நபிகள் தமக்கென்று எடுத்துக் கொண்டார். மற்ற பெண்கள்,
குழந்தைகள் அனைவரும் முஸ்லீம்களின் அடிமைகளக்கப்பட்டு முஸ்லீம்களிடையே பொருள்கள் போல பிரித்து விநி
யோகிக்கப்பட்டனர்.
4. மதீனா நகருக்கு தொலைவில், வடக்கே சில யூதர்களை நபிகள் விட்டு
வைத்தார். அவர்கள் அனைவரும் விவசாயிகள். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல விவசாயம் செய்வதற்கு
ஆளில்லாததால் இவர்களை விட்டு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களிடமிருந்து அரசின்
கஜானாவுக்கு மிகுந்த வருமானம் வந்தது . அறுவடையில் பாதியை முஸ்லீம்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற
உத்தரவோடு இவர்கள் உயிர் வாழ அனுமதிக்கப் பட்டார்கள். பின்னாளில், இஸ்லாம் பரவி , விவசாயம்
செய்யத் தெரிந்த நிறைய அடிமைகள் கிடைத்த பிறகு இந்த யூதர்களும் விரட்டப் பட்டார்கள்.
பத்ரி, நான் மேலே கண்டவற்றிற்கு குறிப்பான சான்றுகள் தரவில்லை. இவை அனைத்தும் யூதர்களால் சிறந்த
முறையில் டாகுமன்ட் செய்யப்பட்டு இணையம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. இஸ்லாமிய சரித்திர புத்தகங்களி
லும் காணக்கிடைக்கிறது. இதில் எதாவது இடத்தில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் குறிப்பிட்டு மடலிடவும்,
சான்றுகள் இணைக்கிறேன்.
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால், மேலே கண்டவற்றை நாம் படிக்கும் போது அது அந்தக்காலத்தில்
நடந்தது. அந்தக் காலத்தில் இது போன்று எங்கும் நிகழ்ந்திருக்கிறது. ஆதலால் இது ஒன்றும் மன்னிக்க
இயலாத குற்றம் அல்ல என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால், இம் மோதல்கள் நிகழ்ந்த கால கட்டங்களில்
வெளிப்பட்ட வன்முறை தோய்ந்த திருக்குரான் வசனங்களை இன்றளவிற்கும் முஸ்லீம் சமுதாயம் திரும்பத் திரும்ப
ஓதி, சிறார்களுக்கு மதராஸாக்களில் போதித்து, வெறுப்பை தொடர்ந்து தோற்று வித்துக் கொண்டிருக்கிறது. இக்கால கட்டத்தில் அல்லாஹ் வினால் வெளிப்படுத்தப்பட்ட சூராக்களை இஸ்லாமிய சமுதாயம் திருக்குரானில்
இருந்து விலக்க வேண்டும், அல்லது , குறைந்த பட்சம் அவை இன்றைய சமுதாயத்திற்கு ஒவ்வாதவை என்று கூற
வேண்டும். னால், நான் அறிந்த வரையில் இது வரை எந்த இஸ்லாமிய அறிஞரும் இவற்றை இந்நாளைய
நாகரீகத்திற்கு ஒவ்வாதவை என்று கூறவில்லை. மாறாக இவற்றை இன்றைய சூழலில் நியாயப் படுத்தவே முயல்கி
ன்றனர். ருமி போன்ற அறிஞர்களாவது முன் வந்து, இந்நிலை மாற வழி வகுப்பார்களா? நேசகுமார்
Posted at 09:30 pm by NesaKumar
Permalink
|
|
|