|
> இத்தனை படித்து விட்டு எப்படி மேலே உள்ள கேள்வியை கேட்கிறீர்கள் >எனப் புரியவில்லை. இதுதான் இஸ்லாத்தில் உள்ள பிரச்சினை. உங்களால், மற்றவர்களது மதத்தத்துவங்கள், சம்பிரதாயங்கள், வழி பாட்டு முறைகளின் பின் இருக்கும் நியாயம், தத்துவங்கள் போன்றவற்றை புரிந்து கொள்ள முடிவதில்லை. மேலே சொன்ன வழிபாட்டு முறைகளுக்குப் பின் இருக்கும் நியாயங்களை, பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எமது சமுதாயத்ததின் உள்முகத்தேடலில் எழுந்த 'ஆன்மீக சுதந்திரம்' எனும் கோட்பாடு, மனித சமுதாய ஆன்மீக வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு ஆகியவை பற்றி விரிவாக ஒரு முறை விவாதம் செய்யலாம். இப்போது நான் உங்களிடம் கேட்பது, 'வணங்காதீர்கள் ' என்று இஸ்லாம் சொல்வது பிரச்சினை இல்லை. அப்படி, நம்புவதற்கு, கூறுவதற்கு, விவாதிப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், உங்களது நம்பிக்கைகளை பிறரின் மீது force செய்யும்போதுதான் அது இஸ்லாமியபாஸிஸமாக (Islamofascism) உருவெடுக்கிறது. ஹிட்லர் இதைத்தான் செய்தான் - தமது இனம் தவிர மற்றவர்கள், தமது இனத்துக்குள்ளேயே பிறழ்ந்தோராக அவன் கருதியவர்கள் ஆகியோரை அழிப்பது மனித சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அவன் எண்ணியதால் ஏற்பட்ட அழிவு நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல், இஸ்லாம் தமது நம்பிக்கைகளை சென்றவிடமெல்லாம் enforce செய்ததால் ஏற்பட்ட அழிவுகள் தாம் எத்தனை. தான் ஒன்றை உண்மை என்று நம்புவதற்கும், அதனை மற்றவர்கள் மீது வலுப்பிரயோகம் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் இஸ்லாத்துக்கு இன்றளவிற்கும் தெரியவில்லை. ஆன்மீகத்துக்கும், மதத்துக்கும், மதத்திற்கும், சமூக நிறுவனங்களுக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கு தனி மனித மத சுதந்திரத்தி ன் அத்யாவசியமும் இஸ்லாம் இன்னமும் உணர மறுக்கிறது. நான் ஒன்று கேட்கிறேன் முனவர், கிறிஸ்துவர்களிள் சிலர் காப்ரியேல் இறைத்தூதர் கிடையாது, இறைவனால் சபிக்கப் பட்டவர், இறைவனுக்கு எதிரான angel என்றும், முகமது நபி இறைக்காட்சியைப் பெறவில்லை என்றும், காப்ரியேல் அவரை தவறாக வழிநடத்திவிட்டார் என்றும் நம்புகின்றனர். இதை அடிப்படையாக வைத்து, உங்களது வழிபாட்டு முறைகளை அழிக்க அவர்கள் முனைந்தால் உலகில் அமைதி தவழ முடியுமா? எல்லா வழிபாட்டு முறையும் இறைவனை நோக்கியே நம்மை இட்டுச் செல்கிறது என்று மதிக்கும் இந்து மதத்தில், பெரும்பான்மையினரால் மிகவும் மதிக்கப் படும் சுவாமி விவேகானந்தர் கூட, தனது இராஜ யோகம் பற்றிய புத்தகத்தில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஆன்மீகப் பாதையில் செல்லும் போது பிறழக் கூடிய வாய்ப்புகள் இருப்பதை பற்றிக் கூறும் போது அதற்கு எடுத்துக் காட்டாக முகமது நபியவர்களை குறிப்பி ட்டு அப்படிப்பட்ட பிறழ்வின் காரணமாக இஸ்லாம் சென்றவிடமெல்லாம் அழிவும், ஏனைய அவலங்களும் நி கழ்ந்ததை சுட்டிக் காட்டுகிறார். இதை மேற்கோள்காட்டி, இஸ்லாத்தை 'திருத்துகிறோம்' என்ற பெயரில் இந்துக்கள் இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிட்டால், அது எவ்வளவு தவறாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். > > ஒரு வலைத்தளத்தில், ஒருவரின் கருத்தை எடுத்துக் கொண்டு இதுதான் இSலாமா? எனக் கேட்பது > சரி எனப்படவில்லை. இது நீ அனுப்பிய சுட்டி தானே எனச் சொல்ல வேண்டாம். இதில் குர்ஆனின் வசனங்களையும், > தற்கால கண்டுபிடிப்புகளையும் தொடர்பு படுத்தி நிறைய வி"யங்கள் உள்ளன. இது உதவலாம் என > எண்ணி அனுப்பினேன். இல்லை முனவர். நீங்கள் சரியாகப் படிக்காமல் கொடுத்து விட்டீர்கள் என்று அந்த வலைத்தளத்தை பார்க்கும் போதே நினைத்தேன். ஏனெனில், இதனை மேம்போக்காக பார்க்கும் போது அது நல்ல விஷயங்களை கூறுவது போல தெரியும். இத்தனை காலம் இஸ்லாம் பற்றி படித்ததாலோ என்னவோ எனக்கு இந்த மாதிரியான இஸ்லாமிய மதவாதிகளை பார்க்கும் போது அவர்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. வலைத்தளத்தை பார்த்தவுடனேயே நேராக People of the Book பகுதிக்கும், புத்தமதம் பற்றிய அவரது புத்தகத்தின் சாராம்சம் பற்றிய கட்டுரை பகுதிக்கும் சென்று படித்துப் பார்த்தேன். அதில் அவர் புத்தமதம், இந்து மதம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்களைக் கண்டவுடன் எனது சந்தேகம் உறுதிப்பட்டது. உடனடியாக உங்களுக்கு சுட்டிகளுடன் மடலிட்டேன். அதே போன்று ரமேஷ் தந்த ஷியா தளம். ஷியாக்களின் நம்பிக்கைகள் பற்றி ஓரளவிற்கு தெரிந்ததால் , உடனடியாக மாஹ்தி வந்தால் என்னவாகும் என்ற 14ம் அத்தியாயம் சென்று எங்களைப் பற்றி என்ன சொல்லியி ருக்கிறார்கள் என்று பார்த்தேன். எதிர்பார்த்ததற்கும் மேலாக, கிறிஸ்துவர்கள், யூதர்கள் கூட முஸ்லீமாக மதம் மாறாவிட்டால் அவர்கள் அழிக்கப் படுவார்கள் போன்ற பாஸிஸக் கருத்துக்கள் விவாதிக்கப் பட்டிருந்தன. அதைத் தான் சுட்டியிட்டு பதிலளித்தேன். > ================ > முSலிம் அல்லதோரை அழியுங்கள் என்று திருகுர்ஆன் சொல்லவில்லை, திருகுர்ஆனின் வசனங்களை > எடுத்துக் கொண்டு உங்களுக்கு பதில் அளிக்கிறேன். எதிர் நோக்குகிறேன் முனவர். - நேசகுமார் - |
| Leave a Comment: |